இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பஸ்சில் பயணித்த மாணவி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொட பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் குழந்தையை காப்பாற்றி போராடிய தாய், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த பஸ்சில் மற்றுமொரு ஆறு மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடிய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மாணவி ஒருவர், பஸ்சில் சிக்கிய ஆறு மாத குழந்தையை, மக்கள் மீட்க வரும் வரை, தனது ஒற்றை கையால் தாங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
பதுளை, ஹிந்தகொடவைச் சேர்ந்த நிஷானி நாமல் ரத்நாயக்க என்ற பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவியே இந்த செயலை செய்துள்ளார்.
குறித்த மாணவி தனது 2ஆம் ஆண்டு தேர்வுகளுக்காக பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்திற்கு முகம் கொடுள்ளார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
