வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர்.
அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியோடு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நால்வரும் 17, 19, 18 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர்களில் இருவர்; ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் மற்றுமொருவர் அவர்களின் உறவினர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
