இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இலங்கையில் தாதியர் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதில் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகவும் கடுமையான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
