பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் சில வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரித்தானியா உயர்ஸ்தானிகர், கனேடிய உயர்ஸ்தானிகர், இந்திய பதில் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதிகளை தமிழ் தேசிய பேரவையின் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது காணி அபகரிப்பு நோக்கத்துடன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் மற்றும் தொல்பொருட் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளை தொல் பொருளுக்குச் சொந்தமான நிலமெனக்கூறி தமது சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகள் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த தூதுவர்களிடம் வலியுறுத்தினர்.
Link: https://namathulk.com/
