கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, முதலாவதாக மாணவி உயிர்மாய்த்த அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இறந்த மாணவியின் தாயாரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் மாணவியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
Link: https://namathulk.com/
