210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த வர்த்தகர்கள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வாகன உதிரி பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் கொழும்பு, கிராண்ட்பாஸை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், கண்டி, ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் அடங்குவர்.
இருவரும் நேற்று காலை காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சோதனையின் போது, சுங்க அதிகாரிகள் பயணிகளின் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.7 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை மீட்டனர்.
Link: https://namathulk.com/
