பஞ்சாப் கிங்ஸ் அணி, காயமடைந்த லோக்கி ஃபேர்கசனுக்கு பதிலாக கைல் ஜெமிசன் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது.
நியூசிலாந்து வீரரான கைல் ஜெமிசன், 2 கோடி இந்திய ரூபாவிற்கு அணியில் இணைந்து கொள்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி, இலங்கை வீரர் குசல் மெண்டிஸ{டன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜோஸ் பட்லர் நாடு திரும்பவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
மெண்டிஸ் 75 லட்சம் இந்திய ரூபாவிற்கு அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி, நியூசிலாந்து வீரர் வில்லியம் ஒரோகேவை இணைத்துக் கொள்கிறது.
அணியின் வீரர் மயாங் யாதவ் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கோடி இந்திய ரூபாவிற்கு வில்லியம் இணைக்கப்படுகிறார்.
இதேவேளை மும்பை இந்தியன்ஸ் சார்பில் விளையாடுவதற்காக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com/
