சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Aarani Editor
1 Min Read
Sabaragamuwa University

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மாணவர்கள் இன்று (16) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயின்ற சரித் தில்ஷான் என்ற மாணவர் தன் உயிரிரை மாய்த்துக் கொண்டார்.

தான் மன அழுத்தம் காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

இருப்பினும், அவரது உறவினர்களும் நண்பர்களும், பல்கலைக்கழகத்தில் நிலவும் பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *