லங்கா கார் வேர்ல்ட் மோசடி: பொதுமக்களின் ஆதரவை நாடும் பொலிசார்.

Aarani Editor
1 Min Read
Lanka Car World Scam

லங்கா கார் வேர்ல்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான நிதி மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சந்தேக நபர்கள் நிறுவனத்தின் பெயரில் வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் விற்பனைக்கு வாகனங்களை விளம்பரப்படுத்தியதாகவும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டு நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிஐடி இந்த விடயத்தை பலபிட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

மேலும், பலர் ஏற்கனவே இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டாலும், சந்தேக நபர்களின் இருப்பிடம் தெரியவில்லை.

சந்தேக நபர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:

ஹேவா தேவகே சஞ்சீவ உப்புல் விஜேரத்ன (NIC : 751752024V)

ரணசிங்க ஹெட்டியாராச்சிகே டிஸ்னா இரோஷானி ரணசிங்க (NIC: 838491553V)

சந்தேக நபர்கள் பற்றிய ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு: 071-8594911 / 011-2398572

சிஐடி: 011-2320140

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *