நான் மஹிந்த ராஜபக்சவின் மகன் ஆகவே அச்சுறுத்தலுக்கு ஒருபோது அடிபணியப் போவதில்லை என நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
அத்துடன் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஒருபோதும் அரசியல் முடிவுகளை எடுக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆற்றிய உரை ஒன்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி 2005 இல்; எனது தந்தையுடன் செயற்பட்டார்.
அந்தவகையில் நான் மஹிந்த ராஜபக்சவின் மகன்,
அச்சுறுத்தல்கள்மூலம் எம்மை முடிவுகளை எடுக்க வைக்க முடியாது.
நாம் மக்கள் ஆணையை ஏற்போம்.
ஆனால் அரசியல் ரீதியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தயாரில்லை.
மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரமே உள்ளுராட்சிசபைத் தேர்தல்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
ஜனாதிபதி அழுத்தங்கள் விடுப்பதால் எமது நிலைப்பாடு மாறாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
