நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக, வருடாந்தம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/
