பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கனிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணைகளை இன்று முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்து, அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
link: https://namathulk.com/
