ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்குமானால் தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியாகுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலந்துரையாடலுக்கு அழைத்தமையினால் தாங்கள் பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
link: https://namathulk.com/
