காசா மீது இஸ்ரேல் நேற்று நள்ளிரவு முதல் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், காசாவின் முற்றுகையிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான உதவிகளை வழங்குமாறும் இஸ்ரேலைக் குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
link: https://namathulk.com/
