முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்குமாறு கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவும வலியுறுத்தி பிரித்தானிய
பிரதமருக்கு மனுவொன்று கையளிக்கப்பட்டது.
இந்த மனுவை சமர்ப்பிக்கும் செயற்பாடனது, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வசே மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த மனுவில்
- இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரேரிக்க வேண்டும்.
- தமிழர்களுக்கு எதிரான யுத்த குற்றம் செய்த ஏனையவர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்துத் தடைகள் விதிக்க வேண்டும்.
- போர்குற்றவாளிகள் தூதுவர்கள் ஆகுவதற்கும் அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதற்கும் தடையிட வேண்டும்.
- சார்பற்ற சர்வதேச விசாரணையை அமைக்க பிரித்தானியா முன்னெடுப்பாக செயல்பட வேண்டும்.
- தமிழினப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
link: https://namathulk.com/
