ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

Aarani Editor
1 Min Read
Easter Attack

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் பலர் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முலாபர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கினை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *