யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.
இதன்போது கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள், அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/
