மட்டக்களப்பு – காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் நேற்றிரவு மூவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அழகுதுரை அழகேசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலங்களில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவம் துரதிஷ்டவசமாக நேற்றிரவு நடந்தேறியுள்ளமை அப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்
link: https://namathulk.com/
