ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டார்.
எனினும் வசந்த சமரசிங்க, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவரின் கருத்து பொய்யென அர்ச்சுனா குறிப்பிட்டார்.
சதோச நிறுவனங்களில், 400 கிராம் உப்பு பொதி ஒன்று, 120 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், சில இடங்களில் மாபியாக்களால் குறித்த உப்பு பொதி, 300 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் வசந்த சமரதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், “துறைமுகத்திற்கு 25 கொள்கலன்கள் வந்திறங்கியுள்ளன.
ஆனையிறவு உப்பு உற்பத்தியும் இடம்பெற்று வருகின்றது.
எனவே, விரைவில் உப்பு தட்டுபாடு பிரச்சினை தீர்க்கப்படும்.
ஆகையால் இனி எதிர்கட்சிகள் புதிய விமர்சனங்களை தேட தயாராக வேண்டும்” என குறிப்பிட்டார்.
இதன்போது, குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஆனையிறவில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது பச்சை பொய் என தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி, ஆனையிறவு உப்பு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த வசந்த சமரசிங்க வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தெற்கிற்கு செல்லும்,
தெற்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வடக்கிற்கு செல்லும் ஏனென்றால் இது ஒரு நாடு.
அதற்கு எதிராக யாரும் போராட முடியாது என குறிப்பிட்டார்.
link: https://namathulk.com/
