பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று (21) நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தால் நடத்தப்படும் பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்காத நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை அடிக்கடி தாக்கி வரும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/
