அவுஸ்;திரேலியாவின் சிட்னி நகரில் AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை செல்வின் தாஸ் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
இவர் திரைப்படத் துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும், கதாநாயகமும் நடித்து வருகிறார்.
கூத்தாடி என்ற பாரம்பரிய கூத்து கலை பின்னணி கொண்ட திரைப்படத்தில் செல்வின் தாஸ் கதாநாயகனாகவும், நித்யராஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Link: https://namathulk.com/
