மலையகத்தில் ஆபத்தான மற்றும் விபத்துக்குள்ளான பகுதிகளில் வீதியின் இருபுறமும் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்பு வேலிகள் கட்டப்படும் என வீதி மேம்பாட்டு ஆணைக்கழு தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு இதுபோன்ற இடங்கள் இருப்பதாக வீதி மேம்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 15 கிலோமீட்டர் பாதுகாப்புத் வேலிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறிய வீதி மேம்பாட்டு ஆணைக்கழு கடந்த காலங்களில் போக்குவரத்து விபத்துக்கள் நடந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
இதன்படி, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வீதிகளில் ஆபத்தான இடங்களிலும் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்புத் வேலிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
