வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.
தென்னாபிரிக்க தூதுவருக்கும் கஜேந்திரகுமார் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.
இதன்போது வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளும் உடனடியாக விடுவிக்கப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
