பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரான்ச் உள்ளிட்ட குழுவினருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.நாவிற்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தவும் மேம்படுத்தும் நோக்கிலும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற துறைகளில் இலங்கையின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஐ.நா.வின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை ஃப்ரான்ச் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜூன் 2025இல் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் இதன்போது திரு. ஃப்ரான்ச் பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.






Link: https://namathulk.com/