கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது,
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Link: https://namathulk.com/
