இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியபோது, ஆண்கள் T20 போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் வைபவ் பெற்றுக்கொண்டார்.
இந்த போட்டியில் அவர் 38 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
சூர்யவன்ஷி, முன்னதாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இளைஞர் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து சாதனைப்படைத்திருந்தார்.
இந்நிலையிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மத்ரே இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
