பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதிவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் இன்று (23) காலை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த சமிந்த விஜயசிறி, 2023ஆம் ஆண்டு தமது எம்.பி பதவியைய இராஜினாமா செய்திருந்ததுடன், மீண்டும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
