நுவரெலியாவில் மற்றுமொரு பஸ் விபத்து – 22 பேர் காயம்.

Aarani Editor
0 Min Read
Bus Accident

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

குருணாகலில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பஸ்சொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளத.

விபத்தில் காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 19 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *