வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அவரை கைது செய்தனர்.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்களிடம் இருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 69 வயதுடைய பெண்ணும் கஜகஸ்தானை சேர்ந்த அவரது மருமகளும் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
Link: https://namathulk.com/
