11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த பிக்குவை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த மே 16 ஆம் திகதி மாலை தரம் 5 மாணவர்கள் 11 பேரின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரான பௌத்த பிக்கு கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய, அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் 11 மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய சந்தேக நபரான வணக்கத்திற்குரிய சுஹதகம சிலாரத்தன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Link: https://namathulk.com/
