ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% கூடுதல் வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளைஇ அமெரிக்காவில் தயாரிக்கப்படாத ஐபோன்களுக்கு குறைந்தபட்சம் 25வீத இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுமாயின் மாத்திரம் வரி விதிக்கப்படும் என அறிவித்த ட்ரம்ப் ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com/
