கனடாவில் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறக்கப்பட்டது.
இவ்வாறு திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
மேலும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் ( (Patrick Brown)) தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
