ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் – அம்பாறையில் சம்பவம்.

Aarani Editor
1 Min Read
Ampara Attack

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் சிலருக்கு விசேட பயிற்சி செயலமர்வொன்று இடம்பெறவிருந்துள்ளது.

இது தொடர்பில் அதிபரின் உத்தரவிற்கு அமைய சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ஆசிரியர் நாளைய பயிற்சி செயலமர்விற்கு செல்வதற்கு ஒன்று கூடுமாறு கூறியுள்ளார்.

இவ்வாறு சில மாணவர்களது வீட்டிற்கு சென்று தகவலை வழங்கிவிட்டு இன்னுமொரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகவலை சொல்ல முற்பட்ட நிலையில் அவ்வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவ்வீட்டில் இருந்து வெளிவந்த ஒருவர் ஆசிரியரை வாளால் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்த சம்பவ இடத்திற்கு சென்ற அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அதிபர் மற்றும் ஆசிரியர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் பொது மக்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக அச்சுறுத்தும் நிலை அதிகரித்து வருவதுடன் வீதிகளிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *