நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
நியூசிலாந்து துணைப் பிரதமர் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
Link: https://namathulk.com/
