கனடா அனுப்புவதாக கூறி யாழ் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

Aarani Editor
1 Min Read
கனடா அனுப்புவதாக கூறி யாழ் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்

அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம் 2024ம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த சந்தேக நபர் மருதங்கேணி பொலிசாரின் உதவியுடன் செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று, கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *