ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
நாளையுடன் லீக் போட்டி முடிவடையவுள்ள நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொள்ள இந்த போட்டியின் முடிவு அவசியமாகும்.
எனவே, இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ந்து 13 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் கால்சதத்தை எட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
