வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதுடன், அது குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன், அமைச்சின் அதிகாரி ஒருவர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரி அமைப்பினதும் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களை உடனடியாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
Link: https://namathulk.com/
