அல்பேனியாவில் இலங்கையர்கள் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போலி ஆவணங்களுடன் காஃபே தானே மலைப்பகுதி எல்லையை கடக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலி குடியிருப்பு அனுமதிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனைகள் மற்றும் ஆவண சரி பார்ப்புகளின் பின்னர் அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய மூன்று இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
அடையாள அட்டைகள், கடவுச்சீட்டு அல்லது விசா மோசடி செய்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/
