இரண்டு பேரை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்ரமசிங்க இல்லாமலாக்கிவிடக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமனற் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை
கூறினார்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அந்த இரண்டு பேரிடமும் இந்த கட்சியை இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எம்மை இங்கிருந்து விரட்டிவிட்டு, அவர்கள் தமது சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற முயல்வதாகவும் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
ரணில் ஜனாதிபதியான போது, அந்த இருவரில் ஒருவர் பாராளுமன்றத்திலும் மற்றையவர் ஜனாதிபதி செயலகத்திலும் இருந்தனர்.
அவர்களின் பணயக் கைதியாக ரணில் மாறியுள்ளதுடன், அவர்கள் இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவது சாத்தியமில்லை.
அவர்களை நீக்கிவிட்டாவது இந்த இணைவைச் சாத்தியப்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மேலும் குறித்த இருவரினது செயற்பாடுகள் தொடர்பில் ருவான், ஹரீன், மனுஷ, அகில, தலதா ஆகியோர் தொடர்ந்தும் அமைதிகாக்க கூடாது.
கொழும்பு மாநகர சபையில் 2018 ஆம் ஆண்டில், 60க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று 13 ஆசனங்களே எஞ்சியுள்ளன.
எனவே, இரண்டு பேரைப் பாதுகாப்பதற்காகக் கட்சியைப் பலியாக்கக் கூடாது என ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் கோருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
Link: https://namathulk.com/
