நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
அந்தவகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 79,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
மேலும் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண்.3 இன் விதிகளின்படி அவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி ஆணைக்குழுவிடம் இல்லை.
காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது
Link: https://namathulk.com/
