இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், தீவிரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட ‘அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க’ இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம், மேலும் வர்த்தகம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.
‘சமாதான முன்மொழிவு’ ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியா ‘உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள்’ என்பதைக் காண்பிப்பார்கள்.
