கொழும்பின் மரைன் டிரைவை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
‘மரைன் நைட்ஸ்: அவேக்கனிங் கொழும்பு’ எனும் தலைப்பில் இந்த முயற்சி, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து தெஹிவளை வரையிலான 7.4 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கி ஆரம்பமாகவுள்ளது.
உள்ளூர் பொருளாதாரத்தைத் வளர்த்தல், சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கப்பட்ட இரவு நேர சுற்றுலா நடவடிக்கைகள் மூலம் கொழும்பில் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Link: https://namathulk.com/
