சீன இரசாயன ஆலையில் பாரிய வெடிப்பு : 5 பேர் பலி

Aarani Editor
0 Min Read

சீனாவின் இரசாயன தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற பெரிய வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஷான்டாங் யூடாவ் இரசாயன தொழிற்சாலைக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *