ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது.
இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயசூழற்சியில் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது
Link: https://namathulk.com/
