நாடு பொருளாதார ரீதியாக மீண்டும் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும் போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைவடைந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.
மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றதை தற்போது அரசாங்கமும் உணர்ந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் அனைவரையும் திருடர்கள் என்றே தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வந்தது.
ஆனால் தேர்தலில் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை மக்கள் வழங்கவில்லை.
180க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒன்று குறுகிய காலத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இந்தளவு பின்னடைவை சந்தித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
Link: https://namathulk.com/
