பாரியக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களை கைது செய்வதில், தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக, வெளியான செய்திகளைத் தொடர்ந்து பொலிஸ் திணைக்களம் விசேட செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி, பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி கித்சிரி ஜெயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யவும், இலங்கையின் தென் மாகாணத்தில்இ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக செயற்படவும் குறித்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த புதிய பிரிவில் 23 மோட்டார் சைக்கிள்கள் செயற்படவுள்ளதுடன் தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுகளில் சுமார் 46 அதிகாரிகள் இந்த நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளனர்.
Link: https://namathulk.com/
