இலங்கையின் பொருளாதாரம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட நிலைக்குத் திரும்புவதற்கு மேலும் 3 ஆண்டுகள் செல்லும் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் மேலதிக ஆளுநர் சந்திரநாத் அமரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2024ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலான வேறுபாடு காணப்படுகிறது.
வெவ்வேறு காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
தற்போது பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையின் பயன், மக்களைச் சென்றடைகிறது.
எனினும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்ந்தும் அதிகமாகவே உள்ளதென்பது தெரியவருகின்றது என, சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
