விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
30 இலங்கையர்களும் இன்று அதிகாலை 04.30 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.
