கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 488,406 வாக்குகளைப் பெற்று, 4.69மூ வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து, கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க புதிய முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்குகளை அதிகரித்தது நான் அல்ல.
நான் அந்தப் பணியை ஒரு குழுவிடம் ஒப்படைத்தேன்.
அவர்கள்தான் வேலையைச் செய்தார்கள்.
ஆனால் இப்போது தெளிவாகத் தெரிகிறது.
மக்கள் புதிதாக ஒன்றைத் தேடுகிறார்கள்.
நாம் புதிய முகங்களைக் கொண்டு வந்து முன்னேற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
