இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர் உட்பட பல முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதையடுத்து இவருக்கு பிறகு அவரது சகோதரர் முகமது சின்வர் ஹமாஸ் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், காஸாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் முகமது சின்வர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பின் முகமது சின்வர், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
